மின்சாரமில்லா இரவு #40

அன்று மின்சாரம் இல்லை

ஆனால் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

சின்னஒரு மெழுகுப்பத்ததி ஒளியில்

குடும்பம் அனைவரும் ஒன்றுகூடி

கதைகள் பேசி மகிழ்சியாய்

விளையாடிய இரவானது.

பாட்டி கதைச்சொல்ல

அம்மா நிலாச்சோறு ஊட்ட

பாட்டுக்கு பாட்டு விளையாடி

இராகமாய் இனித்த இரவானது .

அன்று மின்சாரம் இல்லை

ஆனால் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

– உங்களில் ஒருத்தி

உதவி #39

உதவி கேட்காமல் உதவாதீர்!

என்பது புது மொழியாக மாறிவிட்டாலும்

உதவி கேட்காமலேயே உதவுங்கள்

பிறருக்காக அல்ல உங்களுக்காக!

நீங்கள் யார் என்று

உங்களிடமே காட்டிக்கொள்ள.!

– உங்களில் ஒருத்தி

வரைபடம் #38

ஓவியத்தில் உள்ள வண்ணமும்

ஓவியத்தின் அழகும்

காட்டும் வரைபடம்

ஓவியரின் எண்ணமும்

ஓவியரின் வாழ்வையும்

காட்டாமல் செல்கிறது!

வரைந்தவர்க்கு ஒரு எண்ணம்

பார்ப்பவர்க்கு பல வண்ணம்!

– உங்களில் ஒருத்தி

மாறும் #37

என்றோ ஒரு நாள்

வாழ்க்கை மாறும் என்று

இன்றைய நாட்களை

நாளையில் வாழ்கிறோம்.

மாற்றங்கள் ஒன்றே மாறாதது.

– உங்களில் ஒருத்தி

இரயில் பயணம் #35

கடந்து செல்லும் உருவங்கள்

கண் எதிரே,

நிலைத்து நிற்கும் மனிதர்கள்

உனது அருகே,

நீ கடந்து செல்வதை பார்கிறாயா

அல்லது

உருவங்களை பார்கிறாயா என்பதை

நீ முடிவேடுத்து கொள்..

– உங்களில் ஒருத்தி

வெற்றி எனும் மரம் #32

எண்ணங்கள் விதைகளாய்

வழிமுறைகள் வெளிச்சமாய்

தொடர் பயிற்சி தண்ணீராய்

தோல்விகள் உரமாய்

உழைப்பு விழுதுகளாய்

வெற்றி மரமாய் வளரும்

வாழ்க்கையை வாழ்வோம்.

– உங்களில் ஒருத்தி

கருப்பு வானம் #31

கருப்பு வானமதில்

உலா வரும் சந்திரன்

தன் வெள்ளை நிறத்தோடு

பலர் கருத்துகளையும்

கனவுகளையும் சுமந்து

செல்கிறான்

வெற்றியை நோக்கி

சில நேரத்தில்..

அமைதியை நோக்கி

பல நேரத்தில்..

– உங்களில் ஒருத்தி

நம் வாழ்க்கை